#ரஜினிகாந்த் என்பவர் யார்? அவரும் சாதாரண மனிதர் தான். அவரது தொழில் நடிப்பது. அதை அவர் சரியாகவும், திறமையாகவும் செய்து வருகிறார் அவ்வளவு தான்.
அவரது திறமையை கடந்த 30 ஆண்டு காலமாக மீடியாக்கள் பல்வேறு விதங்களில் அவருக்கு புகழையும், பெருமையும் சேர்த்திருக்கின்றன. அவர் ஏதோ நாட்டுக்காக உழைத்த மாவீரரை போல சித்தரிக்கிறார்கள்.
அவர் இந்தியாவிற்கோ இல்லை, தமிழகத்திற்கோ ஏதாவது செய்திருக்கிறாரா என்று கேட்டால் ஒன்றுமே இல்லை. ஆனால் ரசிகர்கள் அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
ஆனால் ரஜினியோ அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் போது மட்டுமே வாய்ஸ் கொடுப்பார். மக்கள் பிரச்சனை என்றால் பம்மி விடுவார்.
1996 பொதுத்தேர்தலில் வாய்ஸ் கொடுத்து சில நல்லவர்களையும் தோல்வியடைய செய்தார். அதே வாய்ஸ் பின் பலக்கட்டங்களில் பிரச்னைகள் தோன்றும்போது ஏன் அவர் கொடுக்கவில்லை.
ரஜினியை பல ஆண்டுகளாக அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஓய்ந்து போய்விட்டார்கள். படங்களில் இடம் பெறும் வசனங்களில் மட்டும் அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி இன்று வரை தனது அரசியல் பயணம் குறித்து எதுவும் கூறவில்லை.
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி கூறும்போது தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு 1 கோடி தருவதாக அறிவித்தார். அந்த திட்டம் நிறைவேறாது என்று தெரிந்தே அறிவித்தாரோ என்னவோ. இன்று வரை அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டு காலமாக, உச்சநீதிமன்றத்தில் நதிகள் தேசியமயமாக்கப்பட்டு தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் 27.2.2012ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பு நகல் நதிநீர் பிரச்சனையில் அக்கரை உள்ளவர் என்று நடிகர் ரஜினிகாந்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அந்த தீர்ப்பின் நகலை திறந்து பார்த்து படிக்க அக்கரையும், ஆர்வமும் இல்லை. அதற்கு பதிலும் வரவில்லை. வெத்துப் பேச்சுதான். ரஜினி நாட்டுக்கு என்ன செய்ய போகிறார்?
இப்படிப்பட்ட பூஜ்ஜியங்களையும், போலி பிம்பங்களையும் கொண்டாடி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
இன்றைக்கு இலங்கைக்கு ஏதோ தான் ரட்சகர் போல செல்வதை தடுத்துவிட்டதை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அங்கு போனாலும் என்ன சாதித்து வருவார் .
No comments:
Post a Comment