Wednesday, March 29, 2017

R.K. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – வை.கோ
பி.பி.சி. முக்கிய செய்தி
தமிழக இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று வை.கோ தெரிவித்துள்ளார். இதனால் உலகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது, இதனால் உலகத்தில் வெப்பம் அதிகமாக ஏற்பட்டு அண்டார்டிகாவில் பனி பாறைகள் உருகி கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்து, ஐரோப்ப்பாவில் சில நாடுககள் மூழ்கும் அபாயம் எற்பட்டு உள்ளது. வை.கோ.வின் இந்த முடிவால் ஈரானும், வடகொரியாவும் அணு ஆயுத சொதனையில் மும்முரமாக ஈடுட்டு உள்ளன. இது கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் ”டோனால்டு ட்ரம்ப்ட்” வை.கோ.வுடன் தொலைப்பேசியில் தொடர்பு கோண்டு, “உங்கள் முடிவை மறு பரிசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கோண்டர், அதற்கு வை.கோ. “மறுபரிசிலனை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார். இதனால் வெள்ளைமாளிகை சோகத்தில் மூழ்கி உள்ளது. வை.கோ.வின் இந்த முடிவால் ரஷ்ய சனி கிரகத்தில் தனது ராக்கெட்டை தரை இறக்கும் முடிவை தள்ளி வைத்துள்ளது இது தொடர்பாக, ரஷ்ய விண்வெளி நிலைய செய்தி தொடர்பாளர் மாஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பில் “ வை.கோ. இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னதால் இங்கு இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர், இந்த சூழ்நிலையில் ராக்கெட்டை சனி கிரகத்தில் இறக்குவது என்பது இயலாத காரியம் என்பதால். இந்த நிகழ்வை ஆர்.கே. ந்கர் இடைத்தேர்தல் முடிந்த உடன் வைத்துக்கோள்ளலாம் என்று முடிவு செய்து உள்ளோம். என்று கூறினார். வை.கோ.வின் இந்த அதிரடி முடிவால் அமெரிக்க – ரஷ்ய பனி போர் உச்சத்தை அடைந்து உள்ள்து வை.கோ. இந்த முடிவை எடுத்ததற்கு அமெரிகாவின் உள்வுத்துறைதான் காரணம் என்று ரஷ்யாவும், ரஷ்ய உளவுத்துறைதான் காரணம் என்று அமெரிககாவும் ஒருவருக்கோருவர் குற்றம் சாட்டி வருவதால் முன்றாம் உலகப்போர் வந்து விடுமோ என்று உலகமே அச்சத்தில் ஆழ்ந்து உள்ளது, இதனால் ஐ.நா. சபைத்தலைவர் வை.கோ.வுகு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் “ தாங்கள் தயவு செய்து தமிழக இடைத்தேர்தல் நேரடையாக நில்லுங்கள் இல்லை என்றால் யாருக்காவது ஆதரவாவது தெரிவித்து அமெரிக்க – ரஷ்ய பதற்றத்தை தணித்து உலகத்தில் மூன்றாம் உலகப்போர் வராமல் தடுக்க உதவுங்கள்” என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கோண்டு உள்ளார்.
😝😝😝😝

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...