
வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!
வீட்டில் தெய்வசக்தி அதிகரித்து… பிரச்சினைகள் விலகிட…, நாம் அவசியம் செய்ய வேண்டியவைகள்!
இந்த பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் வெவ்வேறு விதமான

பொதுவாக வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சி னையே வாழ்க்கையாக ஆகிவிடக் கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சி னைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.
பிரச்சினைகள், தோஷங்கள் தீர எளிய வழிபாட்டு பரிகாரங்கள்

தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்தால் யோகம். குரு பகவான் படத்தை, நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபட வேண்டும்.
பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தல் நல்லது. லட்சுமி கடாட்சம் உருவாகும். மயில் இறகு, சங்கு போன்றவற்றை வீட்டில் வைத் தல், தெய்வீக மூலிகைகள் துளசி, திருநீற்றுப் பச்சை, வில்வம் வைத்தல், நடையில் சங்கு பதித்தல், நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைப்பது போன்றவை திருஷ்டி தோஷம் போக்கும்.
இவ்வாறு செய்வதால் பிரச்சினை தீருமா? என்று நினைக்கக் கூடாது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்தால் பிரச்சினைகள் விலகி ஓடும்.

No comments:
Post a Comment