Wednesday, March 22, 2017

அதற்கான ஒரே வழி..



காலையில் வேலைக்கு வீட்டில் இருந்து வீதியில் கிளம்பும்போது மனைவியை எதிரில் நடந்து வரச்சொல்வதன் பின்னால் மூடநம்பிக்கை இருக்கென்று நினைத்தால் நாமே முட்டாள்கள். ஏனெனில் அதில் எவ்வளவு பெரிய விஞ்ஞான காரணம் இருக்கென்று நமக்கு தெரியாமல் போய்விட்டது!
Image may contain: one or more people and people standing
ஆம்.
நம் தமிழ் முன்னோர்கள் அக்காலத்திலேயே இந்தளவிற்கு சிந்தித்து சீரிய வாழ்விற்கு எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்கள் என்று நினைத்தாலே சிலிர்க்கின்றது.
ஒரு வேலை விஷயமா வெளியில் போகும்போது அந்த வேலை பற்றிய சிந்தனைதான் ஆண்கள் எல்லோருக்கும் இருக்கும். அதை எப்படியாவது வெற்றிகரமாக முடித்து விட வேண்டும் என்றுதான் நினைக்க தோன்றும்.
அதே நேரம் அந்த வேலையில் பல கஷ்டங்கள் பல போராட்டங்கள் பல்வேறு இன்னல்கள் எதுவேண்டுமெனிலும் வரலாம். ஆக அதையெல்லாம் அந்த ஆண் சமாளித்தாக வேண்டும்.
எதையும் தாங்கும் துணிவு வேண்டும். சமாளிக்கும் திறன் வேண்டும்.
அதற்கான ஒரே வழி..
கிளம்பும் போதே மனைவியை எதிரில் நடந்து வர செய்வது.
ஆம்.
அதன்மூலம் அவனது நாடி நரம்பு சதை புத்தி என எல்லாவற்றிலும் அவன் உணர்வது யாதெனில்..
மவனே இதைவிட உனக்கு என்ன பிரச்சனை இந்த உலகத்துல வந்துடப்போகுது? பிரச்சனையை அசால்ட்டா முடி!
😂😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...