Monday, March 20, 2017

⚡ *தீர்மானம் & குறிக்கோள்* வேறுபாடு..?

 *தீர்மானம்* என்றால் மனது அலசி ஆராய்ந்து உறுதி செய்த ஒரு கருத்து என்பது பொருள்.
மனமே தனது நிலையில் பொய்யானது.அப்படியிருக்க அதன் முடிவு எப்படி உறுதியானதாக இருக்க முடியும்.?

புத்தாண்டில் நாம் எடுத்த தீர்மானங்கள் என்னவாயிற்று என்பது நமக்கு தெரியும்.
அந்த ஜனவரி மாதம் கூட நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது.
குடிக்கவே கூடாது என்று தீர்மானம் செய்யும் குடிகாரர்களை பார்த்தால் அது தெளிவாக தெரியும்.
கோபப்படவே கூடாது என்று பெண்கள் தீர்மானிக்கிறார்கள்.
அடுத்த நாளே அப்படி ஒரு தீர்மானம் எடுத்த ஞாபகமே மறந்துபோகும் அளவு கோபம் வருகிறது.
பழைய கசப்பான நினைவுகளை மறந்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.
ஆனால் அவைகளின் நினைவு தீர்மானித்த பிறகுதான் அதிகமாகி விடுகிறது.
அரசியல்வாதிகள் அதனால்தான் சட்டசபையில் அடிக்கடி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.இந்த உலகத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவே முடியாது என்பது.
எனவே தீர்மானம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நாசூக்கான வழி. அவ்வளவுதான்.
அடுத்ததாக *குறிக்கோள் :-*
நாம் நமது கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் வரைபடம்தான் அது.
கற்பனை போரடிக்கும்போது நாம் குறிக்கோளை கையில் எடுக்கிறோம்.
குறிக்கோள் என்பது மனம் உங்களை நீண்ட காலம் தனது விருப்பப்படி ஆட்டிவைக்கும் மந்திரக்கோலாகும்.
நம்முடைய குறிக்கோள்களை நன்கு கவனித்துபாருங்கள். அவை உடனடியாக நிறைவேறாதவைகளாகவே இருக்கும்.
நீண்ட காலம் அதன்பின்னாடியே ஓடவேண்டியதிருக்கும்.சிலருக்கு அந்த ஓட்டத்திலேயே வாழ்க்கை முடிந்து போய்விடுவதும் உண்டு.
உங்களது கவனம் உங்களுக்குள் திரும்பிவிட்டால் நீங்கள் அடையவேண்டிய இலக்கு இல்லாமல் போய்விடும்.
அப்படி உங்கள் கவனம் உள்முகமாக செல்வதை தடுப்பதற்கு குறிக்கோளைத்தவிர சுலபமான வழி எதுவுமில்லை.
குதிரைகளை பந்தயத்திற்கு பழக்க ஒரு வித்தியாசமான முறையை கையாளுகிறார்கள்.அது என்னவென்றால் குதிரையின் மேல் உட்கார்ந்து கொண்டு அதற்கு பிடித்த உணவை
 ஒரு குச்சியில் கட்டி அதை அதன் முகத்தருகே காட்டுவார்கள்.
குதிரை அதை உண்பதற்காக முன்னேறும்.பிறகு மெல்ல அதை நோக்கி ஓடும்.பிறகு வேகமாக துரத்தும்.கடைசிவரை அதை அதனால் அடையவே முடியாது.
இதைப்போன்றதுதான் குறிக்கோள்.மனம் உங்களுக்கு முன்னால் குறிக்கோளை கட்டி வைத்திருக்கிறது.நீங்கள் அந்த குதிரையைப்போல அதை விரட்டி அதன்பின் ஓடுகிறீர்கள்.
இதுதான் குறிக்கோள் என்பது.
மனம் நீங்கள் நினைக்கும் அளவு முட்டாள் அல்ல.😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...