![]()
இது வெற்று வி(த்)தைகள் அல்ல! வெற்றிக்கான நான்கு அதிஷ்ட வி(த்)தைகள்!
இது வெற்று வி(த்)தைகள் அல்ல! வெற்றிக்கான நான்கு அதிஷ்ட வி(த்)தைகள்
வாழ்வில் வெற்றி என்ற புள்ளியை அடைவதற்கே ஒவ்வொரு மனிதனும் முனைந்து
“நாம் மாவு விற்கப் போனால் காற்றும், உப்பு விற்கப் போ னால் மழையும் கொட்டுகையில் இவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் துலங்குகிறது?” என வென்றவர்களைப் பார்த்து
மற்றவர்கள் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் சில விடயங்களை நாம் பின்பற்றி வந்தால் எங்கள் பின்னே யும் ஒரு பழக்கப்பட்ட நாய்க்குட்டி போல வெற்றி ஓடிவரும்.

வி(த்)தை – 1 => அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளல்
நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதா
ன் வாழ் வின் பொக்கிஷங்கள். சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடா து. ஏனெனில் மீண்டும் நெருப்பு சுட்டுவிடும் என்று அது அனுப வ பூர்வமாக பாடம் படித்து விட்டது. அதுபோல சிலர் தங்களு டைய இலக்கை அடைய தொடர்ந்தும் ஒரே விதமான வகையி ல் தான் முனைவார்கள். அது முன்னர் தோல்வியை தந்திருந்த போதும் அதைப் பற்றி ஆராய மாட்டார்கள். எனவே அவ்வப் போது ஏற்படும் வெற்றி தோல்விகளை அசை போட்டு அனுபவப் பாடங்க ளில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு
நடை போடுங்கள்.

வி(த்)தை – 2 => கைவிடுங்கள் பயத்தை…
பயத்தை கைவிடுவதே வெற்றிப்பாதைக்கு பலம்
சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்க ளைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வே ண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயம் இருந் தால் துணிச்சலாக ஒரு காரியத்தில் நம்மை நம்பி இறங்க மாட்டோம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர்
தயவைவேண்டி நிற் போம். இப்படி பிறரின் கால்களில் நிற்பதால் இருந்த போதும் வெற்றிதேடி வரப்போவதில்லை. அப்படி வந் தாலும்கூட அந்த வெற்றிக்கு நீங்கள் சொந்தம் கொண் டாட முடியாது. எனவே எதுவென்றாலும் எதிர்கொள் ளும் மனதோடு துணிந்து கரும மாற்றுங்கள்.

படி – 3 => வாய் உள்ள பிள்ளையாக மாறுங்கள்

வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெ ரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளை த்துப் போட முடியும். உங்கள் வார்த்தைகளில் தன்னம்பி க்கையும் எதிர்காலம் பற்றிய கனவுகளும் எதிரில் இருப்ப வர்களை வசப்படுத்தும். எனவே உங்க
ளின் திட்ட ங்களுக்கு அவர்கள் மனமுவந்து ஒத்துழைப்பார்க ள். அந்த ஒத்துழைப்பு எதிர்ப்படும் தடைகளைத் தா ண்டி வெற்றியை நோக்கிப் பாய பேருதவிசெய்யும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களு க்கு வெற்றிமேல்வெற்றிதான்.

வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெ ரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளை த்துப் போட முடியும். உங்கள் வார்த்தைகளில் தன்னம்பி க்கையும் எதிர்காலம் பற்றிய கனவுகளும் எதிரில் இருப்ப வர்களை வசப்படுத்தும். எனவே உங்க

வி(த்)தை – 4 => கைவிடக் கூடாத கருமங்கள்

சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல் லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறு கள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது . ‘கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண் டும். அதை வென்று முடிக்க வேண்டும். சிலர் ஒரு கட்டம் வரை தமது உயிரைக் கொடுத்து முயற்சி செய்வார்கள். ஆனால் பின்னர் அது சரிவராது என் று கைவிட்டு விடுவார்கள். ஆனால் அவர்கள் இன் னும் சிறிது அந்த முயற்சியை தொடர்ந்திருந்தால்
மகோன்னத வெற்றியை அடைந்திருப்பர். அவர்கள் இடை நடுவில் கைவிட்டதால் அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை அவரே இழக்கச் செய்தி ருப்பார். எனவே எது வந்தபோதும் எண்ணித் துணிந்த கருமத்தை கடைசி வரை கைவிடக் கூடாது.
*

சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல் லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறு கள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது . ‘கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண் டும். அதை வென்று முடிக்க வேண்டும். சிலர் ஒரு கட்டம் வரை தமது உயிரைக் கொடுத்து முயற்சி செய்வார்கள். ஆனால் பின்னர் அது சரிவராது என் று கைவிட்டு விடுவார்கள். ஆனால் அவர்கள் இன் னும் சிறிது அந்த முயற்சியை தொடர்ந்திருந்தால்

*
No comments:
Post a Comment