1.இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக
விளங்குகிறது.
2.அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.
3.வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

4.நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.
5.துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.
6.தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சிமகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.
No comments:
Post a Comment