ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதை கேள்?” என்றது.
“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”
“அப்புறம்..?”
“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது.”
“அப்புறம்?”
“அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”
“அப்புறம்..?”
“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”
“அப்புறம்..?”
“ அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது.”
“அப்புறம்..?”
“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்.”
“அப்புறம்..?”
“அவ்வளவுதான்.”
உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு
*ஆன்ராய்டு*_*போனாக*ஆக
மாற்றியது!...
😀
😀
😀
😀










No comments:
Post a Comment