Thursday, March 23, 2017

பிரார்த்தனை.....

ஒருமுறை கப்பத்தை வசூலித்துக் கொண்டு, திரும்பும்
வழியில் திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டார் மந்திரி.
காப்பாற்ற இறைவனை வேண்ட, எங்கிருந்தோ ஆறு
இளைஞர்கள் வந்து, திருடர்களை விரட்டி அடித்தனர்.
ராஜா ஆறு இளைஞர்களிடம் எது வேண்டுமோ கேளுங்கள்.,
தருகிறேன் என்றார்.

முதல் இளைஞன், "பண வசதி வேண்டும் ." என்றான்.
இரண்டாவது இளைஞன், " வசிக்க நல்ல வீடு வேண்டும். " என்றான்.
மூன்றாவது இளைஞன், " தன் கிராமத்துச் சாலைகளை சீரமைக்க
வேண்டும்." என்றான்.
நான்காவது இளைஞன், " நான் விரும்பிய செல்வந்தரின் மகளைத்
திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்றான்.
ஐந்தாவது இளைஞன், " தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் பட்டம்
மறுபடியும் வேண்டும்." என்றான்.
ஆறாவது இளைஞன், " எனக்கு பொன் பொருள் எதுவும் வேண்டாம்.
வருடம் ஒருமுறை நீங்கள் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் என்னுடன்
இருந்தால் போதும்" என்றான்.
கடைசி இளைஞனின் கோரிக்கையில் ஒ ளிந்திருந்த உண்மை ராஜா
விற்கு புலப்பட்டது. அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்
நல்ல வீடும், போகும் சாலைகள் பழுதின்றியும், பணவசதியும்,
வேலைக்காரர்கள் பணிவிடை செய்யும் வகையில் ஒரு உயர்ந்த
தகுதியும் இருக்க வேண்டும். ஐந்து இளைஞர்கள் தனித்தனியாகக்
கேட்டதை நாசூக்காக இவன் கூறிய புத்திசாலித்தனத்தை உணர்ந்து
தன் மகளையே அவனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
கடைசி இளைஞனைப் போல், " இறைவனே" நம்மிடம் வர வேண்டும்
என்று பிரார்த்தனை செய்தால், மற்றவையெல்லாம் தானாக வந்து
சேரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...