முதலில் யோகி ஆதித்ய நாத் பற்றிக் கண்ணில் படும் அல்லது காதால் கேட்கும் நல்லவிசயங்கள்:
1) தன்னுடைய மதத்தில் பற்றுள்ளவர், மற்ற ஹிந்துக்களையும் மதத்தின்மீது பற்றுகொள்ளத் தூண்டுபவர். இவ்விசயத்தில் அவர்களுக்கு உதவுபவர். பல கிருத்துவர்களை ‘தாய்மதம்’ திருப்பியதாய் இவரின் ரிக்கார்டுகள் சொல்வதனை, நான் “மத சுதந்திரம்”, “மதப் பிரச்சார சுதந்திரம்” என்ற பார்வைகளில் பார்க்கும்போது பாராட்டவே செய்வேன்.
2) சிறந்த பார்லிமென்டேரியனாக இருந்திருக்கிறார், (இப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்) என்பது அவர் சார்பாக வெளியிடப்படும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது உண்மையாக இருப்பின் பாராட்டவேண்டும். ஆனால், இது இதுவரை அதிகம் வெளிவராத செய்தியாகவே இருந்துள்ளது. இவர் பற்றி வெளிவந்தவை அனைத்துமே இவரது வெறுப்பூட்டும் பேச்சு/நடத்தைகள் மட்டுமே. ஆக, பாஜக உட்பட மீடியாக்கள் இவரை ஓரம்கட்டி வந்தனவா தெரியவில்லை.
3) ஒரே தொகுதியில் தொடர்ந்து 5 முறைக்கு மேல் அதிகமதிகம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று வந்துள்ளார். இதன் மூலம் தொகுதியில் நல்ல பெயர் என்பதும், இவரின் தேர்வை மற்ற பாஜக MLAக்களும் விரும்பியிருந்தால் அதில் தவறில்லை என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
4) இன்னும் தகவல்கள் வரும் என்றே நம்புகிறேன்/விரும்புகிறேன்.
அடுத்து இவருக்கு எதிர்ப்புக்கான காரணங்கள்:
--------------------------------------------------------------------------------------
1) ஹிந்து மதம் பற்றி நன்றாக அறிந்துள்ளாரா என்பது கேள்விக்குறி, காரணம் அவர் மீதான விமர்சனங்கள் இந்த சந்தேகத்தை வரவழைக்கிறது!
--------------------------------------------------------------------------------------
1) ஹிந்து மதம் பற்றி நன்றாக அறிந்துள்ளாரா என்பது கேள்விக்குறி, காரணம் அவர் மீதான விமர்சனங்கள் இந்த சந்தேகத்தை வரவழைக்கிறது!
2) இவரது வெறுப்பூட்டும் பேச்சுக்கள், இவர் அமர்ந்திருந்த மேடையில் இவரது ஆதரவாளரின் மத ரீதியிலான வெறுப்பூட்டும் பேச்சு பற்றிய வீடியோ வலைத்தளங்களில் ‘வைரலாக’ உலாவருகிறது. (அவற்றில் சில சிலருக்கு பதிலடியாக அமைந்தவை என்பதனையும் கவனிக்க வேண்டும். ஆனாலும் அவை தரமற்றவை என்பதும், இந்தியாவின் ஆட்சிபீடத்தில் அமரும் தகுதிக்குப் பொருந்தாதவை என்பதும் உண்மை).
3) திரும்பத்திரும்ப மத ரீதியிலான பிளவை ஊக்குவிப்பவர், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானவர் என்ற கருத்தை புறந்தள்ளமுடியவில்லை.
4) மோடி அல்லது பாஜகவுக்கு அனுகூல சத்ருபோலவே பல சந்தர்ப்பங்களில் நடந்துகொண்டுள்ளார். இவர் RSS தேர்வுதானே தவிர மோடியின் தேர்வு அல்ல என்றும் சொல்லப்படுகிறது. உ-பி. தேர்தல் வெற்றியோ பெருமளவில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கும், மோடியின் பிரச்சாரத்திற்கும் கிடைத்த பரிசு. ஆக, எங்கேயோ ‘பிக்பாக்கெட்’ இழப்பு பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதோ? இதன் விளைவு என்னாகுமோ என்ற ஐயம். :D
5) துறவுக்கோலம் பூண்டுவிட்டு, உலகியல்/அரசியல் விசயங்களில் ஆர்வம் காட்டுபவர்கள் பற்றி பாரதியார் எழுதிய சில கருத்துக்கள் (அவரது பகவத் கீதை விளக்கப் புத்தகத்தில்) எனக்கு இவர் பற்றிய ஐயத்தையே அதிகப்படுத்துகிறது. அது பற்றிப் பின்னர் தனியாக அல்லது முடிந்தால் பின்னூட்டத்தில்!
பொதுவான கருத்து:
====================
1) இவரின் ஆட்சி சிறப்பாக அமைந்துவிட்டால், சனநாயக சக்திகளும், முஸ்லிம்கள் கிருத்துவர்கள் உட்பட அனைவரும் இவரின் மீது நம்பிக்கையுடன் ஆதரிக்க முன்வருவர். அதன் மூலம், போலித்தனமிக்க சனநாயக வாதிகளும், ஊழல் அரசியல் வாதிகளும், மதவாதிகளும், தீவிரவாதப் போக்குடைய மதவாதிகளும் தனிமைப்படுத்தப்படுவர்.
====================
1) இவரின் ஆட்சி சிறப்பாக அமைந்துவிட்டால், சனநாயக சக்திகளும், முஸ்லிம்கள் கிருத்துவர்கள் உட்பட அனைவரும் இவரின் மீது நம்பிக்கையுடன் ஆதரிக்க முன்வருவர். அதன் மூலம், போலித்தனமிக்க சனநாயக வாதிகளும், ஊழல் அரசியல் வாதிகளும், மதவாதிகளும், தீவிரவாதப் போக்குடைய மதவாதிகளும் தனிமைப்படுத்தப்படுவர்.
2) ஒருக்கால், இவரின் ஆட்சி கோர முகத்தையும், மத சகிப்புத்தன்மையற்ற தன்மையையும் வெளிப்படுத்தினால், அனைத்து சனநாயக வாதிகளையும், பன்முகத்தன்மையை ஆதரிக்கும் அனைத்து மதவாதிகளும் (பெரும்பான்மை ஹிந்துக்கள் பாஜகவினர் உட்பட) ஒருங்கிணந்து எதிர்ப்பு அலையை உண்டுபன்னுவர். அது அடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும். இதன்மூலம் மத்திய அரசும் முடிந்தவரை மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் அல்லது அவர்களும் சேர்ந்து எதிர்ப்பு அலையால் துடைத்தெறியப்படலாம்!.
நல்லது நடந்தால் சரி!.
No comments:
Post a Comment