Tuesday, March 28, 2017

இஞ்சி தரும் இனிமையான வாழ்வு :



இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே. இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.
* பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.
* கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி,
பசியின்மையைப் போக்குகிறது.
* கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது.
* மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
* கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர்.
எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...