Monday, March 27, 2017

ஜாதிக்குத்தான் பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறதா?

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை டிவியில் விவாதம் நடைபெற்றது. டிவி விவாதத்தில் வானதி சீனிவாசன் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைத் தேர்தலில் போட்டியில்லை என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை வானதி சீனிவாசன் விமர்சித்துக் கொண்டிருந்தார். 
அப்போது பாஜக வேட்பாளர் கங்கை அமரனை அவர் பாஜக வேட்பாளர் என்று குறிப்பிடாமல் எஸ்சி வேட்பாளர், எஸ்சி வேட்பாளர் என்று திரும்பத் திரும்பக் கூறினார். கங்கை அமரன் எஸ்சி, கங்கை அமரன் எஸ்சி என்று திரும்பத் திரும்பக் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கங்கை அமரனுக்கே அதிர்ச்சியாக இருக்கும் மக்களுக்கு கங்கை அமரன் என்றால் என்ன ஜாதி என்று தெரியாது. அப்படி அவரை யாருமே பார்க்கவில்லை, பார்த்ததில்லை. கங்கை அமரன் என்றால் பாட்டு பாடுவார், இசையமைப்பார், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார், நன்றாகப் பேசுவார், கலகலப்பான மனிதர் என்று மட்டுமே தெரியும்.
ஆனால் கங்கை அமரனை எஸ்சி வேட்பாளர், எஸ்சி வேட்பாளர் என்று வானதி கூறிய விதம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அப்படியானால் ஜாதிக்குத்தான் பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது இப்படிச் சொல்லிக் காட்டுவதற்காகவே கங்கை அமரனை வேட்பாளராக்கியுள்ளதா என்பதை பாஜக தலைமை விளக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...