Tuesday, March 28, 2017

#முடங்கியது_இலையா_நமது_உயிரா???

இலை முடங்கி விட்டதால் உயிர் முடங்கிவிடாது.!!!
சின்னம் என்பது ஒரு அடையாளந்தான்.
கொள்கை என்பதுதான் உயிராகும்.
கொள்கை உள்ளவர்கள் சின்னத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கொள்கையற்ற கோமாளிகள்தான் சின்னத்தைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
குய்யோ முறையே என்று கூக்குரலிடுவார்கள்.
Ops அவர்களை திமுக வின் கைகூலி என்கிறார்கள்.
அன்று திமுக விலிருந்து MGR வெளியேறிய போது காங்கிரசின் கைகூலி என்று இப்படித்தான் கூறினார்கள்.
MGR அவர்கள் உயிரைக்கொடுத்த வளர்த்த உதய சூரியன் சின்னத்திற்காக அவர் கூக்குரல் போடவில்லை.உதய சூரியன் சின்னத்தை விட்டுவிட்டுதான் இரட்டை இலையை தேர்ந்தெடுத்து வெற்றிகண்டார்.
MGR அவர்கள் மறைவெய்திய பின் ஜெயலலிதா அம்மா அவர்களால்தான் இரட்டை இலை முடங்கியது என்று அவர்களுக்கும் துரோகி பட்டம் சூட்டினார்கள்.
இரட்டை இலை யும், துரோகிகளையும் வென்று காட்டினார். இரட்டை இலை போய்விட்டதால் உயிர் போய்விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கவில்லை.
இதய சுத்தியோடு எண்ணிப் பார்ப்போமா.

இரட்டை இலையில் போட்டியிட்ட MGR கால அதிமுக பாராளு மன்ற தேர்தலில் 39 தொகுதி களில் போட்டியிட்டு 37 தொகுதி களில் தோல்வியடையவில்லையா?
ஏன் அம்மாவே கூட இரட்டை இலையில் போட்டியிட்டு தோல்வியடையவில்லையா?
2016 ல் அம்மாவே இருந்து பலமான கூட்டணியில்லாமல் சந்தித்த சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டா லும் கூட 89 தொகுதிகளை எதிர்க்கட்சி களிடம் இழக்கவில்லையா?.
ஆக மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே சின்னம் என்பது ஒரு அடையாளந்தான்.
கொள்கை என்பதுதான் உயிராகும்.
கொள்கை உள்ளவர்கள் சின்னத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
கொள்கையற்ற கோமாளிகள்தான் சின்னத்தைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...