Thursday, March 23, 2017

இந்த மோசடி கும்பலிடமிருந்து இரட்டை இலையை பறித்து காப்பாற்றியுள்ளது.

இனிய தமிழக நடுநிலை நண்பர்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது என்பது சற்று வருத்தமாக இருக்கலாம். ஆனால் நடந்திருக்கும் செயல்கள் அனைத்தும் நன்மைக்கே!!
 இது ஓபிஎஸ் அவர்களின் அணிக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகத்தான் கருதுகிறேன்.
சதி செய்து கட்சியையும், ஆட்சியையும் பிடித்த சசிகலாவை முதல்வர் பதவியில் அமர விடாமல் தடுத்தது முதல்வெற்றி.
தற்போது அன்னிய செலாவணி மோசடி குற்றவாளியான , எந்த தகுதியுமில்லாத டிடிவி தினகரன் எனும் நபர் , துணைப் பொதுச்செயலாளர் என தனக்கு தானே பதவி வழங்கி கொண்டு, RK நகர் தொகுதியில் நானே வேட்பாளர் என தானே அறிவித்துக் கொண்டு, இன்று வரை அதிமுக கட்சி கரை போட்ட வேட்டியை கூட கட்டாமல் உதாசீனப்படுத்தி வருபவர் இந்த போலி நபர். அம்மா கட்டிக்காத்து வளர்த்து வந்த இரட்டை இலை சின்னம் இந்த குற்றவாளிக்கு கிடைக்காமல் செய்தது பன்னீர் அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
பன்னீர் செல்வம் துரோகம் செய்து சின்னத்தை முடக்கினா் என இந்த துரோகிகள் என்னதான் கூப்பாடு போட்டு கூவினாலும்...
இதை மக்கள் நம்மத் தயாராக இல்லை.
இந்த மோசடி கும்பலிடமிருந்து இரட்டை இலையை பறித்து காப்பாற்றியுள்ளது.
இதற்காக உண்மையிலேயே பன்னீர் அவர்களின் அணி பாரட்டுக்குரியது.
இவை எல்லா வற்றிற்கும் மேலாக சசிகலா தலைமையில் உள்ளதுதான் அதிமுக.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது அதிமுகவின் விதிகளின் படிதான் என்றெல்லாம் இவர்கள் கதை விட்டு கொண்டிருந்ததை , தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை.
இதை இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட
விசாரிக்காமலேயே அதிமுக பெயரை சசிகலா பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் தீர்ப்பளித்துள்ளது.
சசிகலா கும்பலுக்கு
இதைவிட வேறு அவமானம் எதுவுமில்லை???
இது தேர்தல் கமிஷன் அளித்த தீர்ப்பு அல்ல.
இது நீதியின் குரல்.
இது இறைவன் அளித்த இறுதி தீர்ப்பு.
திரு.பன்னீர்ச் செல்வம் அவர்களின் அணியினர் வெகு விரைவில் தர்மத்தின் வழியில் சட்டப்போராட்டம் நடத்தி அ.தி.மு.க வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்பார்கள் என்பது மட்டுமின்றி... நம்பிக்கை துரோக... கும்பல்...
சசிகலா குடுபத்தினர்கள் அனைவரையும் கட்சியை விட்டு விரட்டி, வெளியேற்றிய பின், கழகம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படும்.
மீண்டும் இரட்டை இலை துளிர்விடும்!!
என்று நடு நிலைத் தமிழர்களும்,கழகத் தொண்டர்களும் நம்பிக்கையோடு இருப்போம்.
இறுதி விசாரணை ஏப்ரல் 17ல் நடைபெறுகிறது .(17.04.2017ல்)
இதில் ஓபிஎஸ் அணி நிச்சயம் வெற்றி வாகை சூடும்.
கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் மீண்டும் கைப்பற்றும்.
தர்மத்தின் வாழ்வு தனை
(சசிகலாவின் மன்னார்குடி மாஃபியா கும்பலெனும் ) சூது கவ்வும்,
தர்மம் மறுபடியும் வெல்லும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...