10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
ஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், கடைசி அஸ்திரமாக, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.இதற்காக நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில், மாவட்ட வாரியாக பினாமிகள் பெயரில், அமைச்சர்கள் எடுத்த டெண்டர்கள்; மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த கமிஷன் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மேலும், டாக்டர்கள், துணை வேந்தர்கள் நியமனங்களில் நடந்த முறைகேடு உட்பட, ௧௦ அமைச்சர்களின் துறைகளில் அரங்கேறியுள்ள ஊழல் விபரங்களை, பன்னீர்செல்வம் அணியினர் தயாரித்து வருகின்றனர்.
இவை, பட்டியலிடப்பட்டு, உச்ச கட்ட பிரசாரத்தின் போது, வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment