கக்கன் அமைச்சராக இருந்தபோது அவரை சந்திக்க அவரது நெருங்கிய நண்பரும் எம்.எல்.ஏ.வுமான டி.பி. ஏழுமலை அடிக்கடி வீட்டுக்கு வருவார்.
ஒரு முறை அவர் வந்தபோது
அவருக்கு காபி கொடுக்குமாறு கக்கன் சொல்ல.. "வீட்டில் பால் இல்லை" என அவரது மனைவி தயங்கி தயங்கி சொன்னார்.
அவருக்கு காபி கொடுக்குமாறு கக்கன் சொல்ல.. "வீட்டில் பால் இல்லை" என அவரது மனைவி தயங்கி தயங்கி சொன்னார்.
அமைச்சர் வீட்டில் பால் இல்லையா.. ஏழுமலைக்கு அதிர்ச்சி. "ஒரு பசு மாடு வாங்கவேண்டியது தானே?" என எழுமலை சொன்னபோது கக்கன் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தார்.
அடுத்த சில நாட்களில் நூற்றைம்பது ரூபாய்க்கு ஒரு மாடு வாங்கி வந்தார் ஏழுமலை. இதைக் கண்ட கக்கன், "மாடு வாங்கி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அதற்கான ஒப்புகை சீட்டு எங்கே?" எனக் கேட்டதும் நொந்து போனார் ஏழுமலை. "அமைச்சராக இருக்கும் நான் எந்த பொருள் வாங்கினாலும் ஒப்புகை சீட்டு வைக்கவேண்டும் என்பது எம்.எல்.ஏ.வான உங்களுக்குத் தெரியாதா? எனக் கோபப்பட்டார்.
திருவொற்றியூர் சந்தைக்குச் சென்று மாடு தரகனை தேடிப்பிடித்து "மாடு வாங்கிய விவரத்தை எழுதித் தாப்பா.." என்றார். அவனோ சிரித்தவாறே எழுதிக்கொடுத்தான். அதை கக்கனிடம் கொண்டு போய் கொடுத்தார் ஏழுமலை. ஏதோ சாதித்துவிட்ட திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.
ஆனால் கக்கனோ "இந்த ரசீதில் ஏன் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து வாங்கவில்லை. அப்படி வாங்காத ரசீது எப்படி செல்லும். ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்து வாங்கி வாங்க.." என்றார். மீண்டும் தரகனைத் தேடி கையெழுத்து வாங்கிக் கொடுத்த பின்னரே மாட்டை வீட்டுக்குள் கொண்டு வர அனுமதித்தார் கக்கன். இந்தத் தகவலை கக்கன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவின் போது ஏழுமலை சொல்லி கலங்கினார்.
No comments:
Post a Comment