நகங்கள் மிருதுவானவை.
விரல்களின் சதைப் பகுதியி ன் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதி க வளர்ச்சியும், பெண்களுக் கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வள ர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்ப டுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டி ருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால்
மஞ்சள் காமாலையால் பாதி க்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ் சள் நிறத்தில் காணப்படும். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கல
ந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள் பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளி மூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் நகங் கள் வெளுத்து குழியாக இருக் கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்று ம் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்தி ட்டுக்கள் காணப்படும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பத
னால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட் டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலி ஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங் கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டி
ருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத் தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறை த்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மை யுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற் றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின்
நுனிப்பகு திகளை முழுவ துமா க வெட்ட க்கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்டவேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களை யும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண் ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இர வில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண் டும்.
No comments:
Post a Comment