மிகவும் அழகான, அருமையான கண் இமைமுடிகளை பெற . . .
மிகவும் அழகான, அருமையான கண் இமைமுடிகளை பெற . . .
ஒரு பெண்ணை அழகாக காட்டுவது அவளது கண்கள்தான் அந்த கண் என்று சொல்லும்போதே அதன் மேலே உள்ள இமைகளும் அடக்கம்தான். கண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவு
இந்த இமைக்கும் இமையில் உள்ள முடிகளுக் கும் முக்கியத்துவம் தருகிறார்கள். அழகான கண்களுக்கு அழகுசேர்ப்பதால்தான்பெண்களின் கண்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அத்தகைய கண் இமைகளில் வளரும் முடிகளை ஆரோக்கியமானதாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர சில ஆலோசனைகளை கீழே கொடுக்கப்பட்டிருக்கிற து. அதை படித்து கண்ணையும் இமையையும் அழகாக்கும் முயற்சியில் இறங்குங்கள் தோழியரே!
1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்து டன் காணப்படும்.
2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டு மென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களி ல் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரு ம்.
3. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்த லாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும்முன் கண் இமைகள்மீது வாஸ் லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவிவிடவேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.

4. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment