ரயில்வே அமைச்சகம் 2017 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையான மாற்று ரயில் வசதி திட்டம் (ATAS) எனப்படும் 'விகல்ப்' திட்டத்தை அறிவித்துள்ளது
இந்த விகல்ப் திட்டம் மூலமாக ரயில் டிக்கெட் புக் செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ராஜ்தானி, சதாப்தி மற்றும் இதர ப்ரீமியம் அல்லது சிறப்பு மாற்று ரயில்களில் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்
இந்த விகல்ப் திட்டம் மூலமாகக் காலியாகச் செல்லும் ப்ரீமியம் ரயில் சீட்டுகளையும் அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் நிரப்ப முடியும். இப்போது இந்த முறையை ரயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் பரிசோதித்துள்ளது
எனவே ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வரும் விகல்ப் திட்டம் ரயில் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்
மாற்று ரயில் வசதி திட்டமான விகல்ப் முறையை இ-டிக்கெட்கள் மூலமாக மட்டுமே பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பயணம் செய்யக் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் விகல்ப் எனப்படும் தெரிவை தேர்வு செய்ய வேண்டும்
விகல்ப் திட்டத்தைத் தேர்வு செய்துள்ள பயணிகளுக்குத் தொடர் காத்திருப்பு இருக்கும்பட்சத்தில் சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகு டிக்கெட் உறுதி செய்யப்படும். கூடுதல் கட்டணம் ஏதும் கிடையாது, அதே நேரம் அதிகக் கட்டணம் செலுத்திக் குறைந்த கட்டணம் ரயிலில் பயணிக்கும் பொது வித்தியாச கட்டணம் திருப்பி அளிக்கப்படும்
பயணிகள் மாற்று வசதியுடன் டிக்கெட் புக் செய்து இருந்தாலும் மாற்று ரயிலில் செல்லும் போது சாதாரணப் பயணிகளாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால் தரம் உயர்த்தும் சேவைக்குத் தகுதி உண்டு
விகல்ப் தெரிவை தேர்வு செய்து காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் சார்ட் தயார் செய்த பிறகு பிஎன்ஆர் நிலையைச் சரிபார்க்க வேண்டும். விகல்ப் திட்டம் அனைத்து ரயில்களிலும் உள்ள பெர்த்துகளைப் பயன்படுத்தவதற்காகவே என்று ரயில்வே கூறுகின்றது
அசல் ரயிலில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் கூடுதல் மாற்று வசதிகள் தேர்வு செய்திருந்தாலும் அசல் ரயிலில் பயணிக்க முடியாது. விகல்ப் திட்டம் மூலம் மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட உடன் அசல் ரயிலின் காத்திருப்புப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்
மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பிறகு டிக்கெட் ரத்து செய்தால் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு என்ன விதி முறை தற்போது உள்ளதோ அந்த முறைப் படி ரத்துச் செய்யப்பட்டுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
No comments:
Post a Comment