"வெற்றிமுகமாக உள்ள ஒரு மனிதனுக்குப் பின்னணியில் எங்கேயோ ஓர் இடத்தில் அபாரமான நேர்மைக் குணமும் அபாரமான நாணயமும், இருந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு அதுவே காரணம். பூரணமாக அவன் சுயநலமற்றவனாக இல்லாமற் போகலாம். இருப்பினும் அந்நிலையை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கிறான். பரிபூரணமாகவே அவன் சுயநலமற்றிருந்தால் புத்தரைப் போலவோ, கிறிஸ்துவைப் போலவோ அவனும் மகா புருஷனாகியிருக்க முடியும்; எங்கு நோக்கினாலும் சுயநலமின்மையின் தரத்தைப் பொறுத்து தான் வெற்றியின் தரமும் அமைகிறது.
உண்மையான வெற்றிக்கு, உண்மையான மகிழ்வுக்கு மகத்தான ரகசியம் இது தான். பிரதிபலனாக எதையும் கோராத மனிதன் தான், பூரணமாகச் சுயநலமற்ற மனிதன் தான் மாபெரும் வெற்றியை அடைகிறான். ஆனால் அத்துடன், அதுவும் பொருத்தமற்றதொரு புதிராகவும் தோன்றுகிறது. வாழ்க்கையில் சுயநலமில்லாத மனிதன் ஏமாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோமே!
மேம்போக்காகப் பார்த்தால் அது உண்மை தான், ‘கிறிஸ்து சுயநலமற்றவராயிருந்தார், ஆயினும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்‘ இது உண்மையே தான். ஆனால் அவரது சுயநலமின்மை தான் மகத்தானதொரு வெற்றிக்குக் காரணமாக, மூலமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தமது உண்மையான வெற்றியின் அருளாசியால் கோடிக் கணக்கான மக்களுக்கு அவர் உயர்வளித்தார்."
-சுவாமி விவேகானந்தர்-
-சுவாமி விவேகானந்தர்-
No comments:
Post a Comment