சளி என்றாலே பெரும்பாலானவர்களுக்கு ஒரு அருவருப்பான விஷயம். தமக்கு சளி பிடித்தால் கூட அதை சிந்துவதற்கு வெட்கப்பட்டு சளியை சிந்தாமல் மூக்கை உறிஞ்சி கொண்டே இருப்பர். தம் குழந்தைகளுக்கு சளி பிடித்தாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் அளவிற்கு நம்மால் உடனே சளியை தொட முடிவதில்லை. சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis) அல்லது கபவாதம் (Pneumonia) போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும். நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும்.
நெஞ்சு சளிக்கு ஆங்கில மருத்தவம் பார்பதாய் இருந்தால் ஒரே மருத்துவரிடம் பார்க்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வேறு மருத்துவரை அணுக வேண்டி வந்தால் முன்னால் பார்த்து வந்த மருத்துவத்தையும், முக்கியமாக முன்னால் நெஞ்சு சளிக்காக எடுத்துக் கொண்ட மருந்துகளை பற்றி விரிவாக எடுத்துக் கூறிய பின்னரே புதிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில ஆங்கில மருந்துகள் சளியை அதன் கடின தன்மையில் இருந்து மெல்லிதாய் மாற்றி குணபடுத்தும். சில ஆங்கில மருந்துகள் சளியை மேலும் கட்டியாக்கி குணபடுத்தும். ஆங்கில மருந்துகளை பொறுத்தவரை அதன் குணபடுத்தும் திறன் தெரியாமல் மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது. ஏனென்றால் தமிழ் மருத்துவத்தில் உணவுகளை தான் மருந்தாய் உட்கொள்கிறோம். நெஞ்சு சளியை முற்றிலும் குணபடுத்த தமிழ் மருத்துவமே சிறந்தது.
நாள் பட்ட நெஞ்சு சளியை நீக்குவது கடினம். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளியை கண்டறிந்து நீக்கினால் மிக சுலபமாக நீக்கி விடலாம். இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை நாம் இருக்கும் பத்தியத்தை பொறுத்து குணமாகும் நாட்கள் வேண்டுமானால் கூடலாம். பக்க விளைவுகள் அறவே கிடையாது. ஏனென்றால் தமிழ் மருத்துவத்தில் உணவுகளை தான் மருந்தாய் உட்கொள்கிறோம். நெஞ்சு சளியை முற்றிலும் குணபடுத்த தமிழ் மருத்துவமே சிறந்தது.
நெஞ்சு சளியை இயற்கையாக வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே கரைக்கலாம்.
நெஞ்சு சளி கரைய ஆடாதோடா இலை, தேன் கலந்த மருந்து
ஆடாதோடா இலைத் துளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளிக்கு ஆடாதோடை வேர், தேன் மருந்து
ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி நீங்க எலுமிச்சை சாறு, தேன் மருந்து
சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.
நெஞ்சு சளி கரைய மிளகு பால், மருந்து
குடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி கரைய ஆரஞ்சு, எலுமிச்சை மருந்து
வைட்டமின் சி நெஞ்சு சளியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி கரைய துவரம் பருப்பு, குறு மிளகு, உப்பு மருந்து
துவரம் பருப்பு, குறு மிளகு, உப்பு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடி செய்து சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாபிட்டால் நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி கரைய குறு மிளகு, மஞ்சள் தூள், தேன், பால் மருந்து
நெஞ்சு சளி கரைய இரவில் பசும் பாலில் சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து
தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.
நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு , தேன் மருந்து
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து
புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து
வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.
நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து
வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து
பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.
நெஞ்சு சளி கரைய தேங்காய் எண்ணெய், கற்பூரம் மருந்து
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் மிக கவனம். சூடான எண்ணெய் கையில் பட்டால் ஆறுவதும் கடினம், தழும்பும் விரைவில் மறையாது.
தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விட கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
No comments:
Post a Comment