Friday, March 24, 2017

கண்டிப்பாக திரு. ரஹ்மான் அவர்கள் ஒருநாளாவது ரசித்திருப்பார்:



தமக்கு ஒரு பாட்டுக்கு ட்யூன் போட எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதையும், ராஜாசார் இத்தனை ட்யூன்களையும் எவ்வாறு போடமுடிந்திருக்கிறது என்பதையும் நினைத்து.
திரு.வித்யாசாகர் அவர்கள் ஒருநாளாவது வியந்திருப்பார்:
மெலடியில் ராஜாசாருக்கு அடுத்து பேசப்படுவது தான்தான் என்பதுவும், என்றாலும் ராஜாசார் இசையின் தரம் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறதே, அதுவும் ஆயிரக்கணக்கில், என்பதையறிந்து.
திரு.தேவா அவர்களுக்குத் தெளிவாய்த் தெரிந்திருக்கும்:
தனக்கு கானா பாட்டும், குத்து பாட்டும் எளிதாய் வரும் அளவு, மற்ற ட்யூன்கள் போடுவதென்பது எவ்வளவு கடினம் என்பதுவும், அவைகளை ராஜாசார் எவ்வளவு எளிதாய் போடுகிறார் நினைத்த மாத்திரத்தில் என்பதுவும்.
திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் ஐயமேயின்றி அறிந்திருப்பார்:
'வசீகரா' போன்ற 'க்ளாஸ்' பாட்டுகளுக்கு தான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதுவும், ராஜாசார் இதுபோல் ஆயிரங்களில் தரமான பாடல்களை எளிதாகத் தர வல்லவர் என்பதுவும்.
திரு.இமான் அவர்களுக்கும் ஏக்கம் ஒருநாளாவது இருந்திருக்கத்தான் செய்யும்:
இளம் புதிய பாடகர்களின் இளங்குரல்களை வித்தியாசமாக பாடச் செய்தாலும், இளையராஜாபோல், இளமையிலேயே பழம்பெரும் பாடகர்களாம்(legendary singers) லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, பாலமுரளிகிருஷ்ணா, PBS, TMS, ஜிக்கி போன்றவர்களை பாடவைத்தது போன்ற சாதனையை தன்னாலும் செய்ய முடியவேண்டும் என்று.
திரு.யுவன் சங்கர் ராஜாவும் கூட யூகிக்கத்தான் முடியும்போல:
தன் தந்தைக்கு நினைத்த நேரத்தில், அவர் நினைத்த ட்யூனை நொடிப்பொழுதில் போட்டுப் போட்டு அவற்றை நூறாக்கி, ஆயிரமாக்கி குவித்துக் கொண்டிருக்கும் ரகசியத்தை அவரிடம் மகன் இவரே கேட்டாலும், 'நான் எங்கே போடுகிறேன், அதுவாக வந்து விழுகிறது' என்றுதான் சொல்லப்போகிறார், அடக்கமாக.
இப்படிப் பல விஷயங்களும் பல இசையமைப்பாளர்களுக்குத் தெரிந்தவைகள் என்றாலும்கூட, ஒரு இளையராஜாவின் திறன் கண்டு வியப்பது ஒருபுறமிருக்க அவரது சாதனைகள் படைக்கும் ஆசை இவர்களுக்குள் இருக்கத்தானே செய்யும் - என்று என் உள்மனம் உணர்ந்ததையே இங்கு நான் பகிர்ந்துள்ளேன், சிறிது உணர்ச்சிவசப்பட்டும்தான்.
இவை நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்தானே, இசை நட்புகளே..
இசையே கனவாய்
இளையராஜா ரசிகன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...