இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த சசிகலா "உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார்.
"சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
சசிகலா குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார்.
ராணி, "மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார்.
டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார்.
ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?"
ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார்.
"நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் சசிகலா பக்கம் திரும்பி "பார்த்தீர்களா?" என்றார்.
சசிகலா மீண்டும் இந்தியா வந்தவுடன் செங்கோட்டையனிடம் கேட்டார்,
"செங்கோடா, உன் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உன் சகோதரன் அல்ல, உன் சகோதரி அல்ல. யார் அது?"
"உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்" என்ற செங்கோட்டையன் அவரது ஆலோசகர்களான
கைப்பிள்ளை, சினேக்பாபு, வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.
கைப்பிள்ளை, சினேக்பாபு, வண்டு முருகன், வெடிமுத்து , நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சொங்கி மங்கி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை.
அதில் ஒருவர் பழைய பழக்கத்தில் ம.ப.பாண்டியராஜனிடம் ஓடி, "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார்.
ம.பா, "அது நான்தான்!" என்றார்.
விஷயத்தை கேள்விப்பட்ட செங்கோட்டையன் சசியிடம் ஓடி, "எனக்கு விடை தெரியும்" என்றார்.
"சொல்லு".
"ம.பாண்டியராஜன் தான் அது".
சசிகலா அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,
"முட்டாள்! அது டேவிட் கேமரூன் டா!"
No comments:
Post a Comment