Saturday, March 4, 2017

“மனசாட்சி உறுத்துகிறது” 64 எம்.எல்.ஏ.,க்கள் அப்படியே அந்தர் பல்டி..!!

“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு வாழு ராசா..!! நேரம் வரும் காலம் வரும் காத்திருந்து பாரு ராசா..!! என்ற திரைப்பட பாடலை கேட்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.
பன்னீருக்கு நேரமும் காலமும் சொல்லி வைத்ததை போல ஜாக்பாட் அடித்துக்கொண்டே இருக்கிறது. அப்படியென்னதான் நடந்து விட்டது என்று தெரிந்து கொள்ள ஆவல் தானே..??
“சசிகலாவின் பினாமி ஆட்சியை ஆதரிக்கும் 64 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்” என சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் தெரிவித்துள்ளார்.
“மனசாட்சி உறுத்துகிறது” 64 எம்.எல்.ஏ.,க்கள் அப்படியே அந்தர் பல்டி..!!
மேலும் கட்சியை நாசமாக்கும் வேலை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் தான் தற்போது கட்சி கூடாரத்தில் கால் மேல் கால் போட்டு அதிகாரம் செய்கின்றனர்.
அ.தி.மு.க., வின் அடிமட்ட தொண்டன் எவரும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை.
கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.க்களின் வாயை பணத்தால் அடைத்தனர். ஆனால் அவர்களில் 64 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தை எண்ணி மன சாட்சி உறுத்துவதாக தொடர்ந்து எங்களிடம் அலைபேசியில் பேசி வருகின்றனர்.
விரைவில் பன்னீர் செல்வத்தின் தலைமையில் இணைய உள்ளோம். அதுவே கட்சிக்கு உரித்தான செயல், இனி கட்சி எங்கள் கையில் வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...