Friday, March 17, 2017

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! – மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ...

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! – மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ

ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா? பதறாதீர்! – மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ
ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால்
என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்து ப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாம ல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண் டும்? யாரை அணுகவேண்டும்?
இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா?
இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாட்டி ன்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடுசெய்யப்படுகிற தோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படு கிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன. இவர்களின் பணிவங்கியி லிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கி யின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண் மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களி டம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோ ட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன் னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்தி ற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இரு க்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசா ரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டி ருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி நடைமுறைகள்!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்கு ரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந் து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பி ட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூல மும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மை யானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந் தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங் காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கி ல் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடு த்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத் தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலை யத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள் களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூப ணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாள ர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதி யில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
ஆர்.பி.ஐ.-ன் உதவி!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந் த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத் தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலா ம்.
இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு,
என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!
என் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த பயனுள்ள தகவல்


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...