*தமிழகத்தை திட்டமிட்டு வஞ்சிக்கும் இந்தியா:*
பிரதமரின் நிதி பெறும் அளவிற்கு வர்தா புயலால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை -மத்திய நிபுணர் குழு.
*ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசிற்குச் செல்லும் மொத்த வரிப்பணம் 86,000 கோடி ரூபாய் (இந்திய நாட்டில் அதிக அளவு வரிப்பணம் கொடுப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்).*
இவ்வாறு ஆண்டுதோறும் தமிழகத்தின் வரிப்பணத்தை மட்டும் ஒட்டச் சுரண்டிச்செல்லும் இந்திய அரசு, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும், அனைத்து நிதிநிலை அறிக்கையிலும் புறப்கணிப்பதும், மற்ற மாநிலங்களுக்கு மட்டும் வாரிவழங்குவதும் வாடிக்கைதான்.
*ஆண்டுதோறும் 86,000 கோடி வரிப்பணம் கொடுக்கும் தமிழ்நாடு வெள்ளத்தால் அழிந்து கொண்டிருந்தபோது 50,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டபோது, இந்திய அரசு வெறும் 1,000 கோடி மட்டும் தமிழகத்திற்கு பிச்சை போட்டது.*
தற்பொழுது வர்தா புயலால் 30,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததினால் காவிரி தண்ணீரின்றி வறண்டு, காவிரி டெல்டா கருகிப் போயுள்ளது. இதுவரை 216 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனாலும் கர்நாடகத்திற்கு மட்டும் வறட்சி நிதி வழங்கியுள்ளது இந்த கேடுகெட்ட இந்திய பாசிச அரசு.
*#"இந்திய அரசிற்கு எப்போதுமே தமிழகத்தின் வரிப்பணம் மட்டுமே இனிக்கும்!''*
"ஆனால் தமிழகத்தின் நலனோ, தமிழர் உரிமைகளோ பாகற்காயாய் கசக்கும்!."
*#இந்தியாவிற்கு காவேரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோல், ஷெல் கேஸ் மட்டும் இனிக்கும்!*
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் வழங்க மட்டும் ஏனோ கசக்கும்!
*#நெய்வேலி மின்சாரம் இனிக்கும்!.*
நெய்வேலியில் பணிபுரியும் தமிழகப் பணியாளர்களின் உரிமை மட்டும் கசக்கும்!
*#தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் இனிக்கும்!*
இந்திய அரசு நிறுவனங்களில் (இரயில்வே உட்பட) தமிழருக்கு வேலை கொடுக்க மட்டும் கசக்கும்!
*#தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழில் மூலம் ஈட்டிக்கொடுக்கும் அந்நிய செலாவணி இனிக்கும்!*
தமிழக மீனவனின் உயிர் மட்டும் ஏனோ கசக்கும்!
*#இருபது தமிழர் இனப்படுகொலை இனிக்கும்!*
ஏழுதமிழர் விடுதலை மட்டும் கசக்கும்!
*#தமிழ்நாட்டை அழிக்க அணுஉலை, நியூட்ரினோ, மீத்தேன், கெயில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தின் மீது திணிக்க மட்டும் இனிக்கும்!*
தமிழ்நாட்டிற்கு காவேரி, முல்லைப்
பெரியாறு, பாலாறு நீர் உரிமை வழங்க மட்டும் கசக்கும்!
பெரியாறு, பாலாறு நீர் உரிமை வழங்க மட்டும் கசக்கும்!
*#தமிழ்நாட்டில் இந்தி, சமசுகிருதத்தைத் திணிக்க முயல மட்டும் இனிக்கும்!*
செம்மொழியாம் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க, வழக்காடு மொழியாக்க மட்டும் கசக்கும்!
*இந்திய அரசின் தமிழருக்கு எதிரான இவ்வளவு அநீதிகளையும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் நீயும் தேசத் துரோகியே!*
*இவ்வளவு அநீதிகளையும், வலியோடு சுமந்துகொண்டு வெட்கம், மானம், குடு, சொரணை இல்லாமல் இந்தியா வாழ்க என்றும், இந்தியா என் தாய் நாடு என்றும், முழக்கமிட்டால் நீயும் தேசபக்தனே!*
No comments:
Post a Comment