Friday, March 3, 2017

மணல் விற்பனை பற்றி கேட்ட உடனே ஓட்டம் பிடித்த ‘முதல்வர் பழனிசாமி’…!

முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்து முக்கியமான 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மணல் விற்பனை பற்றி கேட்ட உடனே ஓட்டம் பிடித்த ‘முதல்வர் பழனிசாமி’…!
இதன்பிறகு நிருபர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிருபர்கள் கேள்விகள் பலவற்றுக்கும் நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறினார் முதல்வர்.
மாநிலம் முழுக்க வறட்சி நிலவுகிறதே, அதை சமாளிக்க அரசிடம் என்ன திட்டம் உள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு, “நீங்களே பஞ்சம் இருப்பதாக கூறிவிட்டீர்கள். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு, திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் முதல்வர்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் சம்மந்தி மணல் விற்பனையில் சேகர் ரெட்டியுடன் பிசினஸ் பார்ட்னராக உள்ளார்.
இந்நிலையில், மணல் விற்பனையை அரசே நடத்துமா என்ற கேள்வி நிருபரால் முன்வைக்கப்பட்டது. இக்கேள்வியை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்வது என்று யோசித்தார்.
பிறகு, கேள்வியையே கவனிக்காதவர்போல “இப்போது அறிக்கையாக எல்லோருக்கும் கொடுக்கிறோம். நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு விளக்கம் அறிக்கையில் உள்ளது. வந்துள்ள அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வணக்கம்” என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...