Friday, March 3, 2017

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்..?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி இப்போது சிலர் அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு கிகிச்சை அளித்திருக்கின்றனர்; சிகிச்சைக்கு உதவியாய் இருந்த பல செவிலியர்கள் அவரைப் பார்த்திருக்கின்றனர்; இலண்டனிலிருந்து வந்த சிறப்பு மருத்துவரும் சிங்கப்பூரிலிருந்து வந்த பிசியோதெரஃபிஸ்ட்டும் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றார்; டில்லி AIIMS மருத்துவர்கள் அப்போலோ வருகை தந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
இவர்களில் எவருமே இதுவரை ஜெயலலிதா உடல்நிலை பற்றி எவ்வித ஐயமும் எழுப்பவில்லை; புகாரும் கூறவில்லை. ஜெயலலிதா உடல்நிலை விஷயத்தில் ஏதேனும் சந்தேக சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் யாரேனும் வெளிநாடுகளில் இருந்தும் டில்லியில் இருந்தும் மருத்துவர்களை வரவழைப்பார்களா..?அப்போலோ மருத்துவமனை..AIIMS மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், இலண்டன் மருத்துவர், சிங்கப்பூர் மருத்துவர் என இப்படி எல்லோரையும் ஒரே ஒரு நபர் மிரட்டி தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா..?
சமீபத்தில் தமிழக ஆளுநர் கூட தான் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, அவர் தனது கையை உயர்த்தி தான் நலமாக இருப்பதாக அறிவித்ததாக ஒரு ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கூட சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்துவிட்டாரா.. இதே ஆளுநர்தான் சசிகலா வசம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவரை பதவியேற்க அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுக்க புகழும் செல்வாக்கும் பெற்ற, பிரதமர் உட்பட அதிகாரம் படைத்த பலரது ஆதரவைப்பெற்ற, ஜெயலலிதா போன்ற ஒருவர் உடல்நிலை விசயத்தில் ஒரு தனிநபர் உண்மைகளை மறைக்க முடியுமா..?
சிறிது நேர்மையுடனும் மனசாட்சியுடனும் சிந்தித்துப் பார்த்தால் அனைத்தும் விளங்கிவிடும்.
இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.
ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த காலம் முழுவதும் தமிழகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர் பன்னீர் செல்வம்தான். அப்போதெல்லாம் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது பற்றியோ.. மருத்துவமனையில் இருந்த நிலை பற்றியோ..அவரோ அவருடன் இருப்பவர்களோ எவ்வித ஐயமும் எழுப்பவில்லை. மாறாக ஜெயலலிதாவைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்த தமிழக தலைவர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய ரீதியிலான பல்வேறு தலைவர்களுக்கும் அவர் உடல்நிலை பற்றி விளக்கி அவர் நலமுடன் இருப்பதாக கூறியவர் பன்னீர் செல்வம்தான். அதுமட்டுமல்ல.. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டன. அப்படி வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவைக்கை எடுக்க உத்தரவிட்டதும் பன்னீர்செல்வ்ம்தான்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகும் கூட தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட அவர் ஜெயலலிதாவின் மரணம் பற்றியோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலை பற்றியோ எவ்வித ஐயமும் தெரிவித்ததில்லை; அதற்கான விசாரணை நடத்த எவ்வித முயற்சியும் மேற்கொண்டதுமில்லை.
இந்நிலையில் இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புவதும் அதற்காக உண்ணாவிரதம் என்பதும் அப்பட்டமான ஏமாற்று வேலைதானே.மக்களை முட்டாள்களாக்க நடக்கும் முயற்சிதானே இது..இந்த ஏமாற்றும் போராட்டத்திற்கு உடனடியாக ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பது ஸ்டாலினும் பன்னீர் செல்வமும் இணைந்து கொல்லைப்புற வழியாக திமுக வை ஆட்சியில் அமர்த்த மேற்கொள்ளும் நடவடிக்கைதான் இவைகள் எல்லாம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றனவே.
அது மட்டுமல்ல..
அப்படி ஜெயலலிதாவின் உடல்நிலையிலோ, மரணத்திலோ ஐயுறவு கொள்ளத்தக்க விஷயம் ஏதேனும் இருக்குமாயின் முதல்வர் பொறுப்பில் இருந்தும், உண்மையை கூறாமல் மக்களுக்கும் நாட்டின் தலைவர்களுக்கும் பொய் கூறி ஏமாற்றியதற்காக பன்னீர்செல்வம்தானே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...