1) செப்.22-ந் தேதி யாரிடம் இருந்து போன் வந்து போயஸுக்கு ஆம்புலன்ஸ் போனது?
2) ஆம்புலன்ஸில் சென்ற நபர்கள் யார்?
3) போயஸ் கார்டன் பங்களாவில் எந்த இடத்தில் ஜெ. மயங்கி கிடந்தார்?
4) மயக்கம் போட்ட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க போயஸில் மருத்துவர்களே இல்லையா?
5) ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் ஏற்றும் போது கருப்பு பூனை பாதுகாப்பு படையினர் வந்தனரா?
6) ஆம்புலன்ஸில் ஜெயலலிதாவுடன் வெளிநபர்கள் யாரேனும் வந்தனரா?
7) அப்பலோவுக்கும் ஜெயலலிதாவின் கருப்பு பூனை பாதுகாப்பு படை வந்ததா?
8) சுயநினைவே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவுக்கு எப்போது சுயநினைவு திரும்பியது?
9) ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சாதாரண காய்ச்சல் மட்டுமே என ஏன் முதலில் அறிக்கை வெளியானது?
10) செப்டம்பர் 23-ந் தேதி அறிக்கையில் ஜெயலலிதா வழக்கமான உணவை உட்கொள்கிறார் என சொன்னது உண்மையா?
11) வழக்கமான உணவை உட்கொள்கிறார் எனில் சுயநினைவு மறுநாளே திரும்பிவிட்டது அல்லவா?
12) சுயநினைவு திரும்பியது எனில் எப்போது அடுத்தடுத்து நோய்கள் குறிப்பாக நோய் தொற்று தாக்கியது?
13) ஜெயலலிதாவுக்கு மீண்டும் சுவாச பிரச்சனை ஏற்பட்டது?
14) நோய் தொற்றுடன் இருந்ததால் யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்பது உண்மையா?
15) காவிரி குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது உண்மையா?
16) காவிரி குறித்து ஆலோசனை நடத்தியவர்களுக்கு நோய் தொற்று ஏன் தாக்கவில்லை?
17) சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை 75 நாட்களும் பார்த்திருக்கிறார் எனில் அவருக்கு நோய் தோற்று ஏன் ஏற்படவில்லை?
18) சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட நோய் தொற்று தாக்காத கவசங்களை குறைந்தபட்சம் ஆளுநர், மத்திய அரசுக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா?
19) யாரையுமே ஒரு முதல்வரை பார்க்கவிடக் கூடாது என கறாராக உத்தரவிட்டது யார்?
20) டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது எதனால்?
21) எக்மோ கருவியை ஒரு வார காலம் கூட பொருத்தி வைத்திருக்கலாம் என்பது சரியா?
22) எக்மோ கருவியை 24 மணிநேரத்தில அகற்றும் 'முடிவு' செய்தது மருத்துவரா? அல்லது வேறு நபரா?
23) எக்மோ கருவியை அகற்ற முடிவு செய்ததற்கு காரணம் என்ன?
24) எக்மோ கருவியை அகற்றும் வரை ஜெயலலிதா உயிருடன் இருந்தார்... அதை அகற்றியதால் மரணமடைந்தார். அதாவது ஜெயலலிதாவை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளீர்கள் என்பது சரியா?
25) அன்று நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என எழுதிய அப்பல்லோ இப்போது சுயநினைவு இல்லாமல் இருந்தார் ஏன் மாற்றி கூறுகிறது
26) ஜெயலலிதாவின் முந்தைய மருத்துவ சிகிச்சை முறைகள் மீது அப்பல்லோவுக்கு ஏன் சந்தேகம் வருகிறது?
27) ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட முந்தைய மருந்துகள் எவை எவை?
28) ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவில் ஏதும் பிரச்சனை இருந்ததா?
29) டிசம்பர் 6-ந் தேதியன்று ஜெயலலிதா தரப்பினர் மீண்டும் அப்பல்லோ வந்தனரா? 30) டிசம்பர் 7-ந் தேதியன்று ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதித்தவர்கள் மீண்டும் வந்தனரா?
31) அப்பல்லோவின் சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிடாமல் மறைப்பது ஏன்? 32) ஜெ. அனுமதிக்கப்பட்ட பின்னர் அப்பலோவில் சிசிடிவி கேமராக்களை அகற்ற சொல்லி உத்தரவிட்டது யார்?
No comments:
Post a Comment