Friday, March 17, 2017

(வ)தந்தி டி.வி.

சற்று முன் கிடைத்த செய்தி...!!!
"அம்மாவின் ஸமாதியின் அருகில் சற்றே கண் அயர்ந்த காவலாளி கண்ணாயிரம் என்பவரை தியானம் செய்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு எங்கே புது கட்சி ஆரம்பித்து விடுவாரோ என்ற பயத்தில் அவர் பலமாக தாக்கப்பட்டதாக தகவல். விழுந்த தர்ம அடியில் அந்த காவலாளி "ஐயோ.. அம்மா..!!!" என்று கூக்குரலிட்டதை அவர் அம்மாவின் ஆவியுடன் பேசுவதாக பயந்து அவரை குண்டுகட்டாக தூக்கி மன்னார் வளைகுடா பகுதியில் தூக்கிவீசப்பட்டதாக கூடுதல் தகவல் தருகிறார் எமது செய்தியாளர் வெட்டிவேல்."
"ஸொல்லுங்க வெட்டிவேல்..! அங்க இப்ப நெலவரம் கலவரமா இருக்கா??"
"ஆமாம்... ஸமாதியின் நுழைவில் கண் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு குழு ஸமாதிக்கு வருவோர் ஒவ்வொருவருக்கும் கண் மூடாமல் இருக்க மிளகாய் பொடி தூவி உள்ளே அனுப்பப்படுகின்றனர். மிளகாய் பொடி தூவியவுடன் அவர்களது கைகளும் பின்னால் கட்டப்படுவதால் எவராலும் ஸமாதியில் வரட்டி தட்டி ஸபதம் அடிக்க முடியாமலும் தடுக்கப்படுகின்றனர். மேலும் ஸமாதியை சுற்றி சிவப்பு எறும்பு புத்துகள் வளர்க்கப்பட்டு வெளியில் விடப்பட்டுள்ளதால், ஸமாதிக்கு வருவோர் அங்கே நிற்கவும் அமரவும் முடியாமலும் தடுக்கப்பட்டுள்ளது..."
"உங்கள் தகவலுக்கு நன்றி வெட்டிவேல்...! இணைப்பிலேயே இருங்கள்... மீண்டும் உங்களை தொடர்பு கொள்கிறோம்..."

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...