Friday, March 17, 2017

வந்தபிறகு அள்ளிவிடலாம்..

தலைக்கு ஐந்து கோடி என 122 எம்எல்ஏ களுக்கு விலை வைத்து நம்ம்பிக்கை தீர்மானத்தில் வென்றனர் என்ற செய்தியின் அடிப்படையில் இந்த பிசினஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் அனாலிசிஸ் ....
தற்போது ஆர் கே நகர் இடைத் தேர்தலில் நிற்பவர் கட்சி மற்றும் 122 எம்எல்ஏ களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். எனவே வென்றால் நிச்சயம் முதல்வர் .......
இந்த நிலையில் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கான ஒரு பார்முலா ...
இடைத் தேர்தலில் ஜெயித்தால் முதல்வர் என்ற நிலையில் 1000 கோடி கூட செலவழிக்கலாம்தான் ...ஆனால் அதை விட குறைவாகவே செலவிற்கு வழி உண்டு ...சுமாராக 110 கோடி போதும் ...முன்பு எம்எல்ஏ களுக்கு கொடுத்த பணம் மற்றும் கூவத்தூர் ரிசார்ட் செலவு என மொத்தம் ரூபாய் 700 கோடி ஆகி இருக்கலாம்...ஒரு பினாமி முதல்வருக்காகவே செலவு 700 கோடி என்றால் ...110 கோடி என்பது ஜுஜுபி என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் ..
ஆர் கே நகரில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு லட்சம் ..இதில் உச்ச பட்சமாக வாக்கு பதிவு நடந்தாலே 90 சதவீதம் ...ஆக ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்றால் வெற்றி நிச்சயம்...கார்பொரேட் ஸ்டைலில் வேலை செய்தால் போதும்...எலெக்ஷன் மீட்டிங்.....நட்சத்திர பேச்சாளர் இவை எல்லாம் தேவையே இல்லை ..வீண் செலவு .....ஒரு ஆயிரம் வேலை இல்லாத இளைஞர்களை ஏஜெண்ட்களாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கவும் ...அவர்களுக்கு தலைக்கு நூறு ஓட்டுக்களை சேகரிக்கும் பொறுப்பைக் கொடுத்து வார்டு வாரியாக வோட்டர் லிஸ்டையும் கொடுத்து விடவும் ...
வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ பத்தாயிரம் என்று வைத்துக் கொண்டாலும் மொத்தம் ரூ நூறு கோடி மற்றும் ஏஜெண்சி கமிஷன் ரூ பத்து கோடி ...மொத்தம் 110 கோடி ரூபாயில் வேலை முடிந்தது ....
வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் கோடி செலவு செய்யும் அரசிற்கு தலைமை வகிப்பவர்க்கு ஒரு வருடத்தில் 110 கோடி ரூபாய் முதலீட்டை "ரெகவர்" செய்வது எவ்வளவு "கஷ்டம்" என்பதை உங்கள் ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன் ! மேலும் சர்வகட்சி பூத் ஏஜண்ட் களையும் தன் வழிக்கு கொண்டுவரவேண்டும் நோட்டால் அடித்து.
வந்தபிறகு அள்ளிவிடலாம்..
.ராம்மோகனராவ் மாதிரி சீப் செகரட்டரிகளின் சிறந்தஐடியாக்களால் விஞ்ஞான ரீதியில் பில்கேட்ஸ
் அளவிற்கு பணக்காரராக உச்சம் பெறலாம்.பழைய தவறுகள்??? நடக்காமல் இருக்க நிறைய குமாரசாமிகளை துணைக்கு வைத்துக்கொள்ளலாம்...
ஹிஹி...ஹிஹி...
சிறந்த ஐடியாக்கள் கொடுத்த நமக்கும் ஏதாவது கவனித்தால்.
பணம்மட்டும்தான்...மமற்றதிற்கு பாடி தாங்காது!!!!""

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...