Thursday, March 2, 2017

சசிகலா தரப்புக்கு மைத்ரேயன் எம்.பி கேள்வி????

அம்மாவுக்கு சிகிச்சையின்போது பொருத்தப்பட்ட, வென்டிலேட்டரை அகற்ற அனுமதி அளித்ததன் பேரில் அகற்றினோம் என்று மருத்துவமனை நீதிமன்றத்தில் கூறுகிறது. உண்மையில் அதை அகற்ற அனுமதித்தது யார் ? நானும் மருத்துவர் தான். ரத்த புற்றுநோய் சிறப்பு மருத்துவராக நான் உள்ளேன். ஒரு மருத்துவராக செப்டிசீமியா பற்றி நன்கு அறிவேன். செப்டிசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை யாரும் பார்க்க கூடாது என்றோ அல்லது மற்றவர்கள் பார்ப்பதால் தொற்று ஏற்படும் என்று கூறுவதோ சுத்த வடிகட்டின பொய். அப்படி எந்த தோற்றும் ஏற்படாது. அம்மாவை யாரும் சந்திக்க விடாமல் ஏன் தனிமைப்படுத்தினார்கள் ? அம்மா முதல்வராக இருந்தபோது காலமானார் என்பதை அறிவீர்கள். அப்படி இருக்கும்போது அவர் சீரியசாக இருந்தபோது, அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதை மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை. இதை மருத்துவமனை நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. இதுபோல பல்வேறு மர்மங்கள் உள்ளன. இவை உரிய விசாரனை நடத்தப்பட்ட பின் தெரியவரும். எந்த மாதிரி விசாரணை என்பதை குடியரசு தலைவர் முடிவு செய்வார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...