Thursday, March 16, 2017

தலைகுனிந்து செல்லடா

தலைகுனிந்து செல்லடா!

தலைகுனிந்து செல்லடா

பல இளங்காளைகளால் சென்ற மாதம் தலை நிமிர்ந்த தமிழினம் சில சில்லறை
மனிதர்களால் தற்போது தலைகுனிந்து நிற்கிறது. கலாச் சாரத்தை பண்பா ட்டைக் காப்பாற்றுவதற்காக போராடிய இன்றைய இளைய சமுதாயத்தை பெருமையுடன் பார்த்து பாராட்டிய உலகம்…. இன்று பதவிக்காகவும் பணத்துக்கா கவும் கட்சியைக் காப்பாற்றுவதற்காகவும், கேவலமாக அடித்துக்கொள்வதைப் பார்த்து வெட்கப்பட்டு கூனிக் குறியுள்ள‍து.
தலைவரில்லாத குடும்பம் தறிகெட்டுப்போவதுபோல… தலைவரை இழந்த கட்சியின் நிலை கேள்விக்குறியதா கியிருக்கிறது. பதவியிருக்கும்வரை. பதவியில்லை யென் றால் துணிவு, பதவியிருக்கும்வரை எல்லோருக்கும் சரி பதவியில்லையென் றால் எல்லாம் தவறு… என்று பொறு த்தது போதும். என்று பொங்கி எழுகிறார். ஒருவர். கழுத்து க்கு மேல் கத்தி தொங்கினாலும் பதவியில் பத்து விநாடிக ளாவ‌து உட்கார்ந்தே தீருவேன் என்று கட்சியை தலைவர்களை … வாக்களித்தவர்களை பகடைக்காய்களாய் மாற்ற நினைத்தார். மற்றொருவர் மக்க‍ள் பிரதிநிதிக ளை மாட் டுமந்தைகளாய் நடத்திய விதமும்… யார் வேண்டுமானா லும் எப்ப‍டிவேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமா னாலும் எந்தபதவிக்கும் வரலாம் என்கிற கொள்கை யும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய காட்சிகள் குடும்பஆட்சியை எதிர்த்து வாக்குகேட்டு வெற்றி பெற்ற‍ கட்சி இன்று மக்கள்வசமா? (அல்) குடும்பத்தி ன் வசமா? என்பதற்கு விடைதெரியாமல்விழிக்க தமிழ்மக்க‍ள்  எல்லோரும் மக்குகள் அல்ல•
அத்தையின் பேனா மட்டும்போதும் என அடக்கத்தின் அவதார மாய் வெளியே வந்தவர் இன்று கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவ சியம்என்ன? பொதுநலசேவைக்கா? அத்தையி ன் கடனை நானே அடைப்பேன் என்றவர் இந்த சொத்து க்களை எங்களுக்கே சொந்தம் தீ பக்கென்று பற்ற‍ வேண் டிய சூழல் என்ன ?
ஜெயலலிதா என்பவர் இருந்து இறந்தாரா? இறந்து இரு ந்தாரா? மருத்துவர்கள் பார்க்க‍வந்தனரா? இல்லை வந் து பார்த்தனரா? முன்னாள் முதல்வர் சிரித்தாரா? விர லை தூக்கினாரா? இட்லி சாப்பிட்டாரா?- வேதாளமாய் விரியும் கேள்விகளுக்கு விடைகாண இயலாமல் விக்ரமாதித்தனின் த லை வெடிக்கப்போவது நிச்ச‍யம்.
சிவகாமியின் சபதம்போல. சின்னாம்மாவின் சமாதி சபதம் வரலாற்றுப் புகழ் பெற்றுவிட்டது. மா முனிவர்க ளின் தியானத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் இன் ஸடண்ட் முதல்வரின் தியானம் பேசப்பட்டது. கூவத்தூர் வளாகம் கூவமாய் நாறியதும் அம்மா இருந்தவரை அடையா ளம் தெரியாதிருந்த குட்டித் தேவதைகள் எல்லாம் இன்று ஆளுக்குத் தகுந்த மாதிரி அவரவர் தகுதிக்கு அறைகூவல் விடுப்ப‍தும். தமிழ்நாட்டின் அரசியல் மானத்தை கப்பலேற் றி கலவரப்படுத்தின•
அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அவையிலேயே அமர்ந்து அடம்பிடித்து அறிக்கைக ளை கிழித்த‌து… படம்பிடிக்க‍ச்சொல்லி வெளியே வந் தது. இக்காட்சிகளெல்லாம் இயல்பானதா? திட்ட‍மிட்டதா? திணிக்கப்பட் ட‍தா? எல்லாம் அந்த சூரியனுக்குத்தான் வெளிச்சம்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்க‍ப்பட்ட‍ ஜனநாய கம் மக்குகளாலும் மாக்களாலும் மக்கிப்போய் வருவது ஒவ்வொரு வாக்காள‌னுக்கும் தேர்தல்முறைக்கும் இழைக்க‍ப்படும் பச்சைதுரோகம்
தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து செல்லடா என்ற அவலநிலையை மாற்றி தன்மானத்துட்ட‍ன் நெஞ்சுரத்துடன் நாமெல்லா ம் உடனடியாய் உரத்து சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...