Monday, March 6, 2017

ரொம்ப அழகா இருக்குது டா ஒங்க ஆட்சி...

எங்க காசையெல்லாம் demonitisation ங்கிற பேர்ல பேங்க்ல எங்களையே போட வச்சிடீங்க,
காசை 2 மாசத்துக்கு எடுக்க முடியாம கட்டுப்பாடும் போட்டீங்க,
இப்போ போட்ட காச எடுத்தா 150 ரூவா fine போடுவேன்னு ஒருத்தன் சொல்லுறான்,
அப்போ என் காச பேங்க்ல வச்சி எனக்கு 5% வட்டி கொடுத்துட்டு, லோன்னுங்கிற பேருல எனக்கே 14%க்கு குடுப்பீங்க..
சரிடா அப்போ 9% எங்கேன்னு கேட்டா எல்லைல ராணுவ வீரன்னு ஆரம்பிப்பீங்க,
சரி அவன்கிட்ட கேட்டா, சோத்துக்கே வழி இல்லன்னு வீடியோ போடுறான்..
சரிப்பா எதுக்கு சண்டை போட்டுக்கிட்டு, சமாதானமா போலாம்னு ஒரு புள்ள சொன்னா அத கற்பழிப்பேன்னு சொல்லுறீங்க..
என்னடான்னு திருப்பி உங்கள்டையே வந்தா ஹமாறா தேஷ்கி, ஹம்கி, கும்கினு ஏதோதோ சொல்லுறீங்க,
புரியலடான்னு சொன்னா, ஹிந்தி தெரியலானா அவமானம்னு சொல்லுறீங்க..
கடைசியா என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்டா,
நாட்டோடு வளர்ச்சிக்காக உன்னோட நிலத்த கொடுன்னு கேக்குற,
டேய் நான் வட்டி என்னாச்சுன்னு கேட்டா, மொதலுக்கே மோசம் பண்ணுரியே இது நியாயமான்னு கேட்டா..
தேசதுரோகி, நக்சல்ன்னு என்ன சொல்லுற..
ஏன்டா ஒரு மனுஷன் கேள்வி கேக்குறது தப்பாடான்னு கடைசில கேட்டா..
இவ்ளோ லேட்டாவா புரிஞ்சுகிறதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்க..
ரொம்ப அழகா இருக்குது டா ஒங்க ஆட்சி...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...