திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்..
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
ஆனால் இதுவரை எதையும் இழக்க மத்திய அரசு தயாராக இல்லை.
ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை.
ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை.
இது ஒரு தமிழனின் கதறல்.😓😓😓
No comments:
Post a Comment