தேவையைவிட அதிகமாக அதிகமாக அனுபவிக்க விரும்புவதே ஆசையாகும்.
தேவை பூர்த்தியானதும் நீங்கள் நிறைவடைந்துவிட வேண்டும்.செயலை நிறுத்திவிட வேண்டும்.
ஆனால் அப்படி இல்லாமல் தேவை முடிந்ததும் செயலை மீண்டும் எது தூண்டுகிறதோ அந்த தூண்டலின் பெயர்தான் ஆசையாகும்.
உதாரணமாக உங்களுக்கு பசிக்கிறது.உணவை உண்கிறீர்கள்.வயிறு நிறைகிறது.இது தேவை.
ஆனால் அந்த உணவின் சுவைமீது ஆவல்கொண்டு மீண்டும் உணவை உண்பது ஆசையாகும்.
வயிறு நிறைந்தால் அது தேவை.உடலுக்கு நல்லது.
தொண்டைவரை நிரப்புவது ஆசை.உடலுக்கு கேடு.
வெறும் ஆசையால் துன்பம் நேர்வதில்லை. எப்போதெல்லாம் ஆசை செயலுக்கு வருகிறதோ அப்போது துன்பம் வருகிறது.
எனவே தேவைக்கு அதிகமாக செய்யப்படுவதே ஆசை *ஆசையை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்.?*
எப்போதெல்லாம் தேவை மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆசையானது நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆசை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டுமானால் தேவை அளவுமீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசை எது.?தேவை எது.? என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தேவையை ஆசையாக மாற்றாமல் இருந்தாலே போதுமானது. பெரும்பாலான துன்பங்கள் ஓடிவிடும்.
ஆசையை புரிந்துகொள்வதைவிட தேவையை புரிந்துகொள்வதே சரியான வழி.
காரணம் நமது தேவையை நாம் சரியாக அறிந்தால் தேவை முடிந்ததும் நாம் செயலை நிறுத்திவிடுவோம்.அது ஆசையாக மாறுவது தடுக்கப்படுகிறது.
*ஆசையின் மூலம் என்ன.?*
*ஆசையின் மூலம் என்ன.?*
ஆசையின் மூலத்தை அதன்விதையை அபிலாஷை என்று அழைக்கிறார்கள்.
அபிலாஷை என்பது நமக்கு உள்ளே இருக்கும் பதிவுகளாகும்.
நாம் நமது கர்மவினையின் மூலம் புதிய பிறப்பெடுக்கும்போது நாம் அபிலாஷைகளை சுமந்தே பிறக்கிறோம்.
பிறகு வளர்ந்த பிறகு அதற்கான சூழ்நிலை ஏற்படும்போது அந்த அபிலாஷை வேலை செய்கிறது.
அது ஆசையாக வடிவமெடுக்கிறது.
எனவே ஆசையின் மூலம் அபிலாஷை. கர்மவினையின் உந்துதல் என்று பொருள் *ஆசையை நாம் அனுபவிக்கும்போது உச்சத்தில் நமது நிலை என்ன.?*
முட்டாள்தனத்தின் உச்சத்தை அனுபவிக்கிறோம்.
ஆசை என்பதே நம்முடைய தேவைக்கு அதிகமான ஒன்று என்பதை பார்த்தோம்.
அப்படி தேவைக்கு அதிகமான உணவோ உறக்கமோ எண்ணமோ செயலோ இன்பமோ இப்படி எதுவாக இருந்தாலும் அது துன்பத்திடமே நம்மை கொண்டு சேர்க்கிறது.
இடுகாட்டுக்கு செல்லும் வழியை நாம் கொண்டாடினால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் ஆசையின் உச்சத்தை நாம் கொண்டாடுவதும்.
எனவே ஆசையின்உச்சத்தில் நமது மதி மயங்கிவிடுகிறது.இந்த நிலைதான் நிரந்தரமானது என்று மனம் தப்புக்கணக்கு போடுகிறது.
தப்பான கணக்கு நம்மை தவறான வழியில் கொண்டு சேர்க்கிறது.
தவறான வழி நம்மை அழித்துவிடுகிறது.
எனவே ஆசையின் உச்சம் நாம் வேகமாக அழிவை நோக்கி போகிறோம் என்பதற்கான ஒரு அடையாளமாகும்.
*ஆசையை இயல்பாக நமது அனுபவத்தில் கொண்டுவர முடியுமா.?*
*ஆசையை இயல்பாக நமது அனுபவத்தில் கொண்டுவர முடியுமா.?*
நாம் ஏற்கனவே அப்படித்தானே இருக்கிறோம்.?
நீங்கள் ஆழமாகப்பார்த்தால் ஆசைகள்தான் உங்களை ஓடச்செய்கிறது. ஆசைவயப்பட்ட மனிதன் குருட்டுத்தனமாக எதை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.
ஆசை ஒரு வேட்டை நாயைப்போல உங்களை விரட்டுகிறது.
நமது இயல்பே ஆசையாகிவிட்டது.ஆசை குறைவாக இருக்கும் மனிதர்கள் அபூர்வமாகிவருகிறார்கள்.
எனவே ஆசையை அனுபவமாக மாற்றவேண்டிய தேவை இல்லை.அது ஏற்கனவே அப்படித்தான்
ஆசையே அலைபோலேநாமெல்லாம் அதன் மேலே ஓடம்போலஆடுகிறோமே வாழ்நாளிலே.
இனிய காலை வணக்கம்.
என் அம்மாவிற்க்கும்
என் உடன் பிறவா சகோதரிகள், தோழிகள் மற்றும் உறவான நட்புக்களுக்கு என் மனமார்ந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.!
என் அம்மாவிற்க்கும்
என் உடன் பிறவா சகோதரிகள், தோழிகள் மற்றும் உறவான நட்புக்களுக்கு என் மனமார்ந்த மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.!
No comments:
Post a Comment