சசிகலா அணியில் இருந்து வெளியேறும் எம்எல்ஏக்கள்.அதிகரித்து வரும் அதிருப்தி.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.
ஓபிஎஸ்ஐ முதலமைச்சர் பதவியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்தார்.இதனை எதிர்த்து ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்தியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் சிறைக்கு செல்லும் முன்பு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார்.
அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
பின்னர் 122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்ததால் அவர் முதலமைச்சரானார்,
இந்நிலையில் சசிகலா தரப்பில் உள்ள எம்எல்ஏ க்கள் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தின் முக்கிய முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் பங்கேற்கவில்லை. கட்சித் தலைமையின் மேல் இவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதே போன்று நடிகர் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய எம்எல்ஏக்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கருணாஸ் ஏற்கனவே கூவத்தூரில் எம்எல்எக்களுக்கு தேவையானவைகளை சப்ளை செய்ததாகவும் அதனால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. அவரது சொந்த தொகுதிக்குள் கூட கருணாசால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்று தனியரசு,தமிமுன் அன்சாரி ஆகியோரும் தங்களது தொகுதிக்குள் செல்ல முடியவில்லை.
இந்த இக்கட்டான நிலையில் நேற்று தினகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த 4 எம்எல்ஏக்களும் பங்கேற்காததால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment