Saturday, March 18, 2017

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

நம் தமிழ் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று விரும்பும் இளைஞர்களே தற்போது நீங்கள் செய்ய வேண்டி எனக்குத் தெரிந்த சில நெறிமுறைகளைக் கூறியுள்ளேன். நான் குறிப்பிடாத உங்களிடம் உள்ள கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
இதையெல்லாம் செய்யாமல், எங்கள் தமிழ் இனம்தான் உலகுக்கே நாகரீகத்தைக் கற்றுத்தந்தது என்று கூறும் தகுதியை நாம் இழந்துவிடுவோம்.
நிர்வாகம் என்று வருகிறபோது, யாருக்கும் பாரபட்சம் காட்டாதத் தராசு போன்று நம் செயல்பாடு இருக்கவேண்டும்.
பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தச் செயலையும் செய்யாதீர்கள். சால்வைப் போடும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தடுத்திங்கள்.
உலகிலேயே மிகவும் மோசமான புகழ் போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள்.
கடமையை செய்ததற்காக பாராட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
தகுதியற்றவர்கள் நம்மைப் பாராட்டுவதும், தகுதியற்றவர்களை நாம் பாராட்டுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
நாம் நல்லவர்களாகக் கடமை வீரர்களாக மாறவது மட்டுமே நம் வேலை. பிறரை மாற்று முயல்வது நமது வேலையல்ல.
ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
பணத்துக்காக எதையும் செய்பவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.
தலைவர் ஒருவரின் திறமையில் வாழ்ந்தக் கட்சிகள், அத்தலைவருக்குப்பின் என்னவாகிறது என்பதைத் தற்போது நன்கு உணர்ந்துவிட்டதால் இனி ஒவ்வொரு உறுப்பினருக்கும் நாட்டுப்பற்றையும், நாடாளும் பயிற்சிகளையும் அனைவரும் பயில வேண்டும்.
நீர் வளத்தை பாதிக்கும் மணல் கொள்ளையை மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே தடுக்கமுடியும்.
நீர் வளம் நிறைந்துள்ள அண்டை மாநிலங்களில் மணல் அள்ளுவதைத் தடை செய்துள்ளதைப் பார்த்தும் நமக்குப் புத்தி வரவில்லை என்றால் நமக்கு வரும் துன்பத்தை யாராலும் தடுக்க முடியாது.
ஏமாற்றுப் பேர்வழிகளை ஒதுக்குங்கள். உழைப்பாளிகளைப் போற்றுங்கள்.
நாம் பிறரிடம் ஏமாறாதிருக்க நாம் புத்திசாலிகளாவதுதான் தீர்வாகும்.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கல்வித்திட்டத்தில் நம் பிள்ளைகள் படிக்கின்றவரை நம்மிடமுள்ள அடிமைப் புத்தி நம்மை விட்டு அகலாது.
நாம் எப்படி வாழவேண்டும் என்று நாமே முடிவுவெடுக்கும் திறனை வளர்ப்பதாக நம் கல்வித்திட்டம் இருக்க வேண்டும்.
ஆடம்பரம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...